கோவை: மணல் கொள்ளை -நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

கோவை, பெரியநாயக்கன் பாளையம் அருகே செல்வபுரம் கட்டாஞ்சி மலைப் பகுதியில் நீண்ட நாட்களாக நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்கக் கோரி நாம் தமிழர் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள், மணல் கொள்ளை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கோஷமிட்டனர். காவல்துறையினர் தடை விதித்திருந்த நிலையிலும், திடீர் ஆர்ப்பாட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் மற்றும் சோபனாரி பழங்குடி மக்கள் உள்ளிட்ட சுமார் 70 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி