கோவை: தொழிலதிபரிடம் ரூ. 50 லட்சம் மோசடி.. 6 பேர் கைது

கோவை தொழில் அதிபர் திருமூர்த்தியிடம், இரிடியத்தில் முதலீடு செய்தால் வெளிநாட்டில் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் கிருஷ்ணகிரியை சேர்ந்த செந்தில்குமார் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தன்னை ரிசர்வ் வங்கியின் வெளிநாட்டு நாணயத்துறை அதிகாரி என அறிமுகப்படுத்தி, போலியான அடையாள அட்டை மற்றும் ரசீது வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார். முதலீடு செய்த பணம் திரும்ப வராததால் மோசடி அம்பலமானது.

தொடர்புடைய செய்தி