மதுரையைச் சேர்ந்த மாணவி, விமான நிலையம் அருகே காரில் இருந்தபோது மர்மகும்பல் மாணவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ், கார்த்திக், குணா ஆகிய 3 பேரையும் சுட்டு பிடித்தனர். தொடர்ந்து கோவை நடுவர் நீதிமன்ற நீதிபதி அப்துல் ரகுமான் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.