அவர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் நேற்று பேசிய தகவல்களை எங்களிடம் தெரிவித்தனர். இந்த பேச்சுவார்த்தையில் ஒரு சிறிய முன்னேற்றம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. நாங்கள் கேட்கும் கூலிக்கும், ஜவுளி உற்பத்தியாளர்கள் கொடுக்க முன்வரும் கூலிக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. எனவே, ஜவுளி உற்பத்தியாளர்களை மீண்டும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான முடிவை பெற்றுத் தர வேண்டும். நாங்கள் 60 சதவீத கூலி உயர்வு கேட்டோம், தற்போது கணிசமாக குறைந்து வந்துள்ளோம். ஜவுளி உற்பத்தியாளர்கள் சிறிய அளவிலான உயர்வுக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர். ஆனால் அது தொழிலை பாதுகாக்கும் அளவிற்கு போதுமானதாக இல்லை. அடுத்த கட்டமாக எங்களது கூட்டமைப்பை கூட்டி ஆலோசித்து முடிவு எடுப்போம் என்று கூறினார்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி