கோவை: ரயில் நிலையத்தில் PET பாட்டில் துகளாக்கும் இயந்திரம்

SharonPly நிறுவனத்தின் நற்பணியின் ஒரு பகுதியாக, கோவை ரயில் நிலையத்தில் புதிய PET பாட்டில் துகளாக்கும் (Shredding) மிஷின் இன்று நிறுவப்பட்டுள்ளது. பயணிகள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களை இயந்திரத்தில் இடுவதன் மூலம், அவை துகள்களாக மாறி மறுசுழற்சி செய்யப்பட முடியும். பிளாஸ்டிக் கழிவுகளை குறைத்து சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயணிகள் பிளாஸ்டிக் பாட்டில்களை பொது இடங்களில் வெளியே போடாமல், இந்த மிஷினை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த விழாவில் SharonPly நிறுவன மேனேஜர் தக்ஷிணாமூர்த்தி மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தொடக்கத்தை முன்னிறுத்தினர்.

தொடர்புடைய செய்தி