கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தேசிய தலைவர்களை சந்தித்தது தேர்தல் பரப்புரைக்கான ஆலோசனைக்காகவே என தெரிவித்தார். ரஜினிகாந்த் பெரிய நடிகர், பண்பாளர், அரசியலில் செல்வாக்கு கொண்டவர் என்றும் குறிப்பிட்டார். கோவை தெற்கில் திமுக வெற்றி பெற வாய்ப்பு இல்லை எனக் கூறிய அண்ணாமலை விஜய்யின் பரப்புரைக்கு அனுமதி மற்றும் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.