பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ் மாறன், பேரூர் ஆதினத்தின் 24-வது குரு மகாசன்னிதானம் தெய்வத்திரு பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு அரச மரத்தை நடவு செய்வதை இலக்காக கொண்டு ஒரு கிராமம் ஒரு அரச மரம் எனும் மாபெரும் திட்டம் துவங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் முதல் அரச மரக்கன்றை பேரூர் ஆதீனம் வளாகத்தில் நடவு செய்ய உள்ளனர் என தெரிவித்தார்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்