கோவை: ஆப்ரேஷன் சிந்தூருக்கு நன்றி தெரிவிக்கவில்லை; தமிழிசை

பா. ஜ. க மூத்த தலைவர் மற்றும் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாட்டின் பாதுகாப்புக்காக ஆபரேஷன் சிந்தூரில் முப்படை வீரர்கள் உயிரை பணயம் வைத்து செயல்பட்ட நிலையில், தி. மு. க பொதுக் குழு கூட்டத்தில் அவர்களை பாராட்டி ஒரு தீர்மானமாவது நிறைவேற்ற வேண்டும். 

ஆனால் உதயநிதிக்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் மட்டுமே எடுக்கப்பட்டதாக விமர்சித்தார். அதே நேரத்தில், ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ற பெண்களுக்கு நன்றி தெரிவிக்க கூட தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றார். தமிழகத்தில் வந்தே பாரத் ரயில்கள் அதிகமாக வழங்கப்பட்டும், ரயில்வே துறையை கண்டிக்கும் தீர்மானம் தி. மு. க எடுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். முதல்வர் மற்றவர்களை கோமாளி என விமர்சிப்பதை சம்மதிக்கவில்லை என்றும், தி. மு. க – காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப்பவாதம் எனவும் தெரிவித்தார். கமலஹாசன் தி. மு. க-வுக்கு எதிராகக் கட்சி தொடங்கி, இப்போது அதே கூட்டணியில் இருப்பது சந்தர்ப்பவாதம் எனவும் விமர்சித்தார். அ. தி. மு. க – பா. ஜ. க கூட்டணி தலைவர்கள் இணைந்து பயணிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி