கோவை: அரசு மருத்துவமனையில் புதிய வசதிகள் - அமைச்சர் தகவல்

கோவை அரசு மருத்துவமனையில் புதிய பிரிவுகள் நேற்று திறக்கப்பட்டன. அமைச்சர் மா. சுப்பிரமணியம் கலந்து கொண்டு 50 பேருக்கு இலவச கண் கண்ணாடி வழங்கினார். 9.65 கோடி ரூபாயில் சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றுள்ளன. நோயாளிகள் எண்ணிக்கை 5000-ஆக உயர்ந்துள்ளது. புற்றுநோய் கண்டறியும் கருவிகள் 5 மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ளன. செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை குறைந்த செலவில் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது. 

வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஹார்மோன் மருந்து திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான திட்டம் கோவையில் செயல்படுகிறது. நீட் தேர்வில் தமிழகத்தில் 76,181 பேர் தகுதி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெறாதவர்களுக்கு மனநல ஆலோசனை திட்டம் தொடங்கப்பட உள்ளது. திருநெல்வேலி மாணவியின் நீட் சிக்கல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி