காலமுறை ஊதியம், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 3-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். தேர்தல் வாக்குறுதிகளை இனி நம்பமாட்டோம் என்றும், கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் ஊழியர்கள் தெரிவித்தனர்.