நேற்று முன்தினம் (மார்ச் 14) இரவு 10.30 மணிக்கு சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் கருமடை தோளம் பாளையம் சாலையில் உள்ள கருட தீர்த்த தெப்பக்குளத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். வாணவேடிக்கை முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க தெப்பத்தேர் திருவிழா நடைபெற்றது. தெப்பக்குளத்தில் தேர் ஆடி அசைந்து வந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று சந்தான சேவை எனும் சாற்று முறை உற்சவ பூர்த்தி நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு