கோவை: குளத்தில் ஆண் சடலம் மீட்பு

கோவை உக்கடம் பெரியகுளத்தில் நேற்று (ஜூன் 10) ஒரு ஆண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மீட்கப்பட்டவரின் வயது சுமார் 35 இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்த தகவல்கள் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள உக்கடம் போலீசார், இறந்தவர் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சடலத்தின் அடையாளம் மற்றும் இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி