கோவை அருகே வெள்ளானைப்பட்டி ஊராட்சியில் ஆடு மேய்க்கும் தொழிலாளி தேவராஜ் (55) மர்மமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அன்னூர் பச்சாபாளையம் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற தேவராஜ் இரண்டு நாட்களாக வீடு திரும்பாத நிலையில், வெள்ளானைப்பட்டி செரயாம்பாளையம் காட்டுப்பகுதியில் அரை நிர்வாண நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் மரக்கட்டையால் தலையில் தாக்கி கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.