கோவை சர்வதேச விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மகளிர் நீதிமன்றத்தில் பொதுமக்கள் சாட்சியம் அளித்தனர். கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி, மாணவி தனது ஆண் நண்பருடன் காரில் இருந்தபோது 3 இளைஞர்கள் தாக்குதல் நடத்தி வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜரானார்; மற்ற இருவர் சிகிச்சை காரணமாக ஆஜராகவில்லை. வழக்கு தொடர்ந்து விசாரணையில் உள்ளது.