கோவை சொக்கம்பத்தூரில் சுவாமி விவேகானந்தர் கல்ச்சுரல் அசோசியேஷன் சார்பில் இன்று சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர். கடந்த 10 ஆண்டுகளாக இந்த முகாம் நடைபெற்று வருவதாகவும், ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி போன்ற பல உதவிகளையும் செய்து வருவதாகவும் அசோசியேஷன் முன்னாள் தலைவர் சுப்ரதா பாரிக் தெரிவித்தார்.