கோவை மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வரும் ஜூலை 2-ம் தேதி 100 ஏழை, எளிய இந்து ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருமணத்திற்கு 4 கிராம் தங்க தாலி, பீரோ, கட்டில் உள்ளிட்ட ரூ. 1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களும் வழங்கப்படும். மணமகன் குறைந்தது 21 வயதும், மணப்பெண் 18 வயதும் நிரம்பி இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் கோவையில் உள்ள அனைத்து கோவில் அலுவலகங்கள் மற்றும் இணை/உதவி ஆணையர்கள் அலுவலகங்களில் கிடைக்கும். முந்தைய ஆண்டில் உக்கடம் நரசிம்மர் கோவிலில் 50 ஜோடிகளுக்குத் திருமணம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.