கோவை: ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை (VIDEO)

கோவையில் பெய்து வரும் தொடர் கனமழையால் பில்லூர் அணையின் நீர்மட்டம் விரைவாக உயர்ந்ததால், அணையின் பாதுகாப்பிற்காக வினாடிக்கு 14,000 கனஅடி உபரிநீர் பவானியாற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் பெருக்கம் அதிகரித்து, கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி மற்றும் கேரள மலைப்பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கான நீர்வரத்து 15,000 கனஅடியாக அதிகரித்து, நீர்மட்டம் 100 அடிக்கு நெருங்கியது. தற்போது 97.5 அடியில் பராமரிக்கப்படும் நிலையில், மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் காவல்துறை மற்றும் வருவாய்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தியுள்ளது. மக்கள் ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ, பரிசல் மூலம் கடக்கவோ கூடாது என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி