அப்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே விவசாயிகள் உள்ளே செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் வந்து நின்று கொண்டிருந்தபோது ஒரே இடத்தில் நிற்கக்கூடாது என காவல்துறையினர் வலியுறுத்தியதாக கூறி திடீரென ஆட்சியர் அலுவலக வாயிலுக்கு சென்ற அவர்கள் நாங்கள் இங்கே முழக்கங்கள் எழுப்புவோம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் காவல்துறை உயர் அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி மனு அளிப்பதற்கு உள்ளே அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கான்வேயின் இரட்டை சதம்: அஸ்வின் பாராட்டு