கோவை மாவட்டம் சிறுமுகையைச் சேர்ந்த விவசாயி கார்த்திக் ராஜா (33), தனது தாய் மற்றும் தங்கையுடன் சொத்து பிரச்சனை தொடர்பாக வழக்கில் ஈடுபட்டுள்ளார். பாசன நீரை தடை செய்ததாக குற்றம் சாட்டி, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற அவரை போக்குவரத்து மற்றும் ரோந்து போலீசார் தடுத்து காப்பாற்றினர். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தி எச்சரித்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.