அண்ணாஜீராவ் சாலையில் உள்ள மூன்று SDPI நிர்வாகிகள் வீடுகளில் நேற்று காலை 8 மணி முதல் இரவு 7.15 மணி வரை சோதனை நடைபெற்றது. CRPF பாதுகாப்புடன் மூன்று குழுக்களாகப் பிரிந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து SDPI கட்சியினர் வீட்டின் முன் கூடி கோஷங்களை எழுப்பினர். ராஜிக் மற்றும் ரீலா ஆகியோரது வீடுகளில் சோதனை முடிவடைந்த நிலையில், வாஹித் ரகுமான் வீட்டில் சோதனை தொடர்ந்து நடைபெற்றது. சோதனையின் முடிவில் வாஹித் ரகுமான் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக கைது செய்யப்பட்டார்.
SDPI கட்சியினர் அமலாக்கத்துறை அதிகாரிகளின் காரை சூழ்ந்து கோஷங்களை எழுப்பினர். SDPI கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சபிக், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சோதனை நடத்தப்பட்டதாகவும், பொய்யான தகவல்களின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.