கோவை: மூதாட்டி பலாத்கார வழக்கு; வாலிபர் கைது

கோவை அருகே அமைந்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி, தனியாக வசித்து வருகிறார். இந்த மூதாட்டியின் வீடு அருகே கட்டுமான பணி நடைபெற்று வருகிறது அதில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

சம்பவதினத்தன்று அதிகாலையில் மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென அவரை தாக்கி கீழே தள்ளி, மூதாட்டியை பாராமல் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அலறி துடித்த மூதாட்டி கத்தி இருக்கிறார். 

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வர, அந்த வட மாநில தொழிலாளி தப்பி ஓட முயன்றுள்ளான். அவனை சுற்றி வளைத்து அக்கம் பக்கத்தினர் பிடித்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அந்த வாலிபரை போலீசார் கைது செய்து அவனிடம் நடத்திய விசாரணையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சமீர் மாலிக் (25) என்பது தெரிய வந்துள்ளது. 

காவல் துறையினர் அந்த வாலிபரை கைது செய்து, வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி