கோவை: ரயில் மோதி முதியவர் பலி

கோவையை அடுத்த நஞ்சுண்டாபுரம் நொய்யல் பாலம் அருகே ரயில் தண்டவாளத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ரயில்வே போலீசார் உடலை மீட்டனர். ரயில் மோதி உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அடையாளம் தெரியாத அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி