கோவை, சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு - ஈச்சனாரி சாலை சந்திப்பில், லாரி ஓட்டுநர் ஆறுமுகம் மது போதையில் டிவி சத்தம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கேரளாவைச் சேர்ந்த ஷியாம் என்பவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இருவரும் ஒரே சிமெண்ட் கடையில் வேலை செய்து வந்தனர். ஷியாம் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். சுந்தராபுரம் காவல்துறையினர் இது குறித்து நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவான ஷியாமை போலீசார் தேடி வருகின்றனர்.