இந்த கொலை வழக்கில் கோமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை நேற்று முடிவு பெற்று குற்றவாளி சதீஷ்குமாருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ. 4000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் மோகன்ராஜ் ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டினார்.