கோவை: மதுபோதையில் கொடூரக் கொலை... மூவர் சரண்

கோவை மாவட்டம் சூலூர் அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் சக ஊழியர்களால் கொலை செய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார். சுரேஷ்குமாருடன் வேலை பார்த்த ரகுபாண்டியன், கிருஷ்ணன், கரண் ஆகியோர் மது அருந்தும்போது ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் தகராறாக மாறியது. 

ஆத்திரமடைந்த ரகுபாண்டியன், சுரேஷ்குமாரை கண்ணாடி பாட்டிலால் குத்திக் கொலை செய்தார். பின்னர் மூவரும் உடலை எரித்து, புதைத்து மறைத்தனர். நேற்று குற்றவாளிகள் மூவரும் சூலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி