கோவை: ரெயில் மோதி குட்டியானை உயிரிழப்பு

தமிழக-கேரள எல்லைப் பகுதியான வாளையாறு அருகே நேற்று மாலை, யானைகள் கூட்டம் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரயில் மோதி 4 வயது ஆண் குட்டியானை பரிதாபமாக உயிரிழந்தது. கேரள வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை மீட்டு பரிசோதனை செய்தனர். மதுக்கரை வனப்பகுதியில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மூலம் யானைகள்-ரயில் மோதல் தடுக்கப்பட்டுள்ள நிலையில், கேரள எல்லைப் பகுதிகளிலும் இதுபோன்ற பாதுகாப்பு வசதிகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி