கோவை: 4 விமான சேவைகள் நிறுத்தம்

கோவையில் இருந்து இயக்கப்படும் நான்கு விமான சேவைகள் ஜூலை 1 முதல் நிறுத்தப்படவுள்ளன. இண்டிகோ நிறுவனம், சென்னை, மும்பை, ஹைதராபாத் சேவைகளை நிறுத்த திட்டமிட்டுள்ளது. மேலும், கோவை-அபுதாபி விமான சேவையும் அக்டோபர் மாதத்தில் ரத்து செய்யப்பட உள்ளது. 

ஏர் இந்தியா சார்பாகவும், சென்னை-கோவை சேவை ஜூலை 1 முதல் நிறுத்தப்படவுள்ளது. இந்த திடீர் முடிவுகள், விமான பயணிகள் மற்றும் தொழில் துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. விமான சேவைகள் குறைவதால், கட்டணங்கள் பல மடங்கு உயரும் அபாயம் இருப்பதாக தொழில் துறையினர் எச்சரித்துள்ளனர். அதிக சேவைகள் வழங்கும் வகையில், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி