கோவை மாவட்டத்தின் தொண்டாமுத்தூர் பகுதியில் 10 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிஷ்ணு சரண் பிரதான் (42), நஹு பிரதான் (34) ஆகியோர் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரத்துக்கு பாதகமான குற்றங்களில் ஈடுபட்டதாக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் இந்த உத்தரவை பிறப்பித்தார்.