கோவையில் இருந்து அன்னூர் நோக்கி வந்த லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் மின்கம்பங்களை மோதி சேதப்படுத்தியது. சம்பவ இடத்தில் யாரும் இருக்கவில்லை என்பதால் உயிர் சேதம் ஏற்படவில்லை. இந்த விபத்து தொடர்பாக அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. விபத்து குறித்து அன்னூர் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.