இந்நிலையில் நேற்று அவரது தந்தை ஐயப்பனின் நினைவு தினம் என்பதால் அவரது தாயார் தெலுங்கு பாளையத்தில் உள்ள மற்றொரு மகன் சுந்தர் என்பவர் வீட்டிற்கு சென்றுவிட்டார். வீட்டில் சரவணக்குமார் மட்டும் தனியாக இருந்தார். அப்போது திடீரென அவரது உறவினருக்கு வாட்ஸ் ஆப் வீடியோ காலில் பேசிய சரவணக்குமார் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறினார்.
இதனால் பதறிப்போன அவரது உறவினர் உடனே இது குறித்து சரவணக்குமாரின் அண்ணன் சுந்தருக்கும், தாயாருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் உடனே வீட்டுக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் சரவணக்குமார் சேலையால் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.