கோவை ரத்தினபுரி, தில்லை நகரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (40). தொழிலாளி. இவர் நேற்று தயிர் இட்டேரி பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து மதுகுடிக்க பணம் கேட்டார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோஷ்குமாரின் இடுப்பில் வைத்து அவரது பாக்கெட்டில் இருந்த ரூ. 500ஐ பறித்து தப்பிச்சென்றார். இது குறித்து சந்தோஷ்குமார் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் சந்தோஷ்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தது கோவை மாநகரை விட்டு வெளியேற சம்மன் கொடுக்கப்பட்ட ரவுடியான வடவள்ளி, வீரகேரளம் பகுதியை சேர்ந்த விஷ்ணு பிரகாஷ் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.