பேரூர்: செங்கல் சூளை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

பேரூர் தாலுகா வடிவேலம்பாளையம் கிராமத்தில் பெருமாள்சாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் செயல்பட்டு வந்த செங்கல் சூளை, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அரசு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. இருப்பினும், இந்த செங்கல் சூளை சட்டவிரோதமாக இரவு நேரங்களில் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து பூலுவபட்டி கிராம நிர்வாக அதிகாரி செல்விக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் வருவாய் துறை அதிகாரிகள் செங்கல் சூளைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, சீல் வைக்கப்பட்ட நிலையிலும், சட்டவிரோதமாக செங்கல் சூளை இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கிராம நிர்வாக அதிகாரி செல்வி அளித்த புகாரின் பேரில், வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் செல்வராஜ் (வயது 50) மீது ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி