பேராசிரியர் காமராஜ் தனது மகள்கள் ஈஷா யோகா மையத்தில் இருப்பதாகவும், அவர்களை சந்திக்க ஈஷா அனுமதி மறுப்பதாகவும் தெரிவித்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், அவரது மகள்கள் இருவரும் ஈஷா யோகா மையத்தில் துறவியாக மாற்றப்படுவதாகவும், உறவினர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
காமராஜர் தனது மனுவில், ஈஷா யோகா மையத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடப்பதாகவும், ஒரு மருத்துவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், நீதிமன்றம் விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டது. இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டதன் அடிப்படையில், எஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான காவல்துறை அதிகாரிகளும், சமூக நலத்துறை அதிகாரிகளும் ஈஷா யோகா மையத்தில் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.