அதன்படி, ராம்தர்ஷனின் கல்லீரல், 2 சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவை தானம் செய்யப்பட்டன. ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனைக்கும், கல்லீரல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் மாற்று அறுவை சிகிச்சைக்காக நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. ராம்தர்ஷனின் உயரிய உடல் உறுப்பு தானத்திற்கு, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் முதல்வர் மற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், ராம்தர்ஷனின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்