துடியலூர் அருகே வட்டமலைபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி பின்புறப் புதரில், அனிதா (25) என்ற இளம்பெண்ணின் பாதி எரிந்த சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவருக்கு தமிழ்செல்வன் (30) என்பவருடன் இருந்த பழக்கத்தின் அடிப்படையில், ஏற்பட்ட வாக்குவாதத்தில் கட்டையால் தாக்கி கொலை செய்து, சடலத்தை எரித்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. செல்போன் தகவல்களின் அடிப்படையில் போலீசார் தமிழ்செல்வனை கைது செய்தனர். தப்பிக்க முயன்றபோது எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.