ஹீமேம் அனிமல் சொசைட்டி விலங்குகள் நல அமைப்பினர் சம்பவ இடத்திற்கு வந்து நாயைப் பிடித்தனர். ஆனால், சிறிது நேரத்திலேயே அந்த நாய் உயிரிழந்தது. உடற்கூறு ஆய்வில் நாய்க்கு ரேபிஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, லாலி ரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், வளர்ப்புப் பிராணிகளுக்கு உரிய நேரத்தில் தடுப்பூசி போடுவதன் அவசியத்தை உணர்த்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கான்வேயின் இரட்டை சதம்: அஸ்வின் பாராட்டு