கோவை: பஞ்சர் கடை உரிமையாளர் விபத்தில் படுகாயம்

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் ஜோதிகாலனியை சேர்ந்தவர் ஜெர்மன் அந்தோணிபாபு (55). இவர் பஸ் நிறுத்தம் அருகே பஞ்சர் கடை நடத்தி வருகிறார். நேற்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பாளையம் - கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை தடுப்பில் அவரது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி