ஆனைமலை காவல் நிலைய எல்லைக்குள் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தனகிருஷ்ணன் (28) என்பவர் கைது செய்யப்பட்டார். காவல் காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், ஆட்சியர் பவன்குமார் உத்தரவின்படி சந்தனகிருஷ்ணன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறையில் இருக்கும் அவரிடம் இது தொடர்பான நகல் வழங்கப்பட்டுள்ளது.