இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கட்சியின் பொதுச் செயலாளர் இளவேனில் பேசினார். அவர் பேசும்போது, நாட்டின் மாணவர்களுக்கு கல்வி உரிமை அளிக்க வேண்டிய ஒன்றிய அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வித் தொகையை முழுவதுமாக மறுத்து வருகிறது என்றார். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட வேண்டிய ரூ.4,200 கோடியை வழங்காததற்கான காரணமாக, தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கையை (NEP) ஏற்கவில்லை என்றும், ஹிந்தியை ஏற்க தயாராக இல்லை என்றும் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். இது ஜனநாயகத் தத்துவத்துக்கும் எதிரான செயல். மேலும், புதிய கல்விக் கொள்கை என்பது மக்களை முடக்கும் ஒரு திட்டமாகவே மாறியுள்ளது.
இது மாணவர்களை 50 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லும் ஒரு சூழ்ச்சி. அரசு பள்ளிகள் மீண்டும் துவக்கப்பட்டுள்ள இந்த கட்டத்தில், லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி உரிமையை இழந்து சாலைகளில் நிற்கும் நிலைக்கு வந்துள்ளனர். இச்சூழ்நிலைக்கு பொறுப்பு ஏற்க வேண்டியது ஒன்றிய அரசே என கூறினார்.