கோவை மாணவர்கள் 60 பதக்கங்கள் வென்று சாதனை!

நேபாளத்தின் பொக்ரா நகரில் நடைபெற்ற இந்தியா-நேபாள சர்வதேச கராத்தே, சிலம்பம் மற்றும் யோகா போட்டியில் கோவை ஜேகேடிசி கல்ச்சுரல் அகாடமி மாணவர்கள் 60 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்தப் போட்டியில், கோவை மாணவர்கள் 32 தங்கம், 24 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் தாய்லாந்து மற்றும் மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசிய அளவிலான போட்டிகளுக்கும் தகுதி பெற்றுள்ளனர். நேற்று கோவை விமான நிலையம் வந்தடைந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி