கோவை: ரஜினி கேங் - திரைப்பட குழு செய்தியாளர் சந்திப்பு!

மிஸ்ரி என்டர்பிரைசஸ் தயாரிப்பில், இயக்குநர் ரமேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர்-காமெடி திரைப்படமான 'ரஜினி கேங்' வரும் நவம்பர் 27-ம் தேதி தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் ரஜினி கிஷன், நடிகைகள் திவிகா, மீரா மற்றும் மொட்டை ராஜேந்திரன், கூல் சுரேஷ், கோப்ரா பிரதீப் குமார், கல்கி ராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜோன்ஸ் ரூபட் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், ஜி. வி. பிரகாஷ் மற்றும் ஆண்டனி தாஸ் பாடிய பாடல்களும் இடம்பெற்றுள்ளன. முழுக்க முழுக்க காமெடி மற்றும் பேயை மையமாகக் கொண்ட இந்தப் படம் வெறும் 25 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது. ப்ளூ என்ற நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கோப்ரா பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி