இந்திய விமான நிலைய ஆணையத்தின் உத்தரவின்படி, கோவை விமான நிலையத்திலும் தற்போது கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை கூடுதல் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. பயணிகள் தங்கள் விமான நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்கு வந்து, தங்களது உடைமைகளை சோதனைக்கு உட்படுத்தி ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று விமான நிலைய இயக்குனர் சம்பத் குமார் இன்று தெரிவித்துள்ளார்.
புதிய வாக்காளர்கள் சேர்ப்பு: அன்புமணி அழைப்பு