கோவை மாவட்டம் சூலூரில் ஆர். வி. எஸ் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற மெகா ரோபோ ஃபெஸ்ட் 2026 தொழில்நுட்ப விழாவில், பள்ளி மாணவர்கள் உருவாக்கிய ஏஐ தொழில்நுட்ப நாய் ரோபோ, பிளாஸ்டிக் குப்பை அள்ளும் சென்சார் ரோபோ, பொருளின் வரலாற்றை விளக்கும் ஏஐ மாடல் போன்ற புதுமையான படைப்புகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஷரத் குமார் யாதவ் மாணவர்களின் படைப்புகளைப் பாராட்டி, நவீன உலகில் ரோபோட்டிக்ஸ் மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். மத்திய அரசு இதுகுறித்து பல்வேறு ஊக்கத் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும், சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் தொழில்நுட்பத் திட்ட அறிக்கை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.