கோவை: லாரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

உக்கடம் லாரி பேட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் லாரியில் நேற்று (மே 19) அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் உயிரிழந்தவர் சுந்தராபுரத்தை சேர்ந்த ராஜன் என்பதும், லாரி பேட்டையில் மெக்கானிக் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. சடலத்தின் அருகே மது பாட்டில் இருந்ததால், மது அருந்தியபோது உடல்நலக்குறைவால் இறந்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி