கோவை: லாரி கவிழ்ந்து விபத்து.. ஓட்டுநர் உயிர் தப்பினார்

கோவை வாளையார் அருகே எல் அண்ட் டி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சரக்கு லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. கேரள பதிவெண் கொண்ட இந்த லாரி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பின்னால் வந்த வாகனங்கள் நெருக்கமாக வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. க. க. சவாடி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி