கோவை: மதுபான ஊழியர் கொலை – 6 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வடுகபாளையத்தைச் சேர்ந்த ஆனந்த் (45) என்பவர், கடந்த 5.11.2018 அன்று பொள்ளாச்சி ஏ.டி.எஸ்.சி. சாலையில் உள்ள மதுபான பாரில் சதீஷ்குமார் உள்ளிட்ட 6 பேருடன் ஏற்பட்ட தகராறில் கடுமையாகத் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு கோவை 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தது. சிறுவன் தொடர்பான வழக்கு சிறுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி