இந்த நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த சத்யமூர்த்தி (50), விஜயராகவன், ஆறுமுகம் மற்றும் மணி ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து வேறு ஒருவருக்கு விற்று மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சத்யமூர்த்தி, ஆறுமுகம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விஜயராகவன், மணி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த மோசடி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.