கோவை: பிரதமர் அறிவுறுத்தலின்படி எல் முருகன் கான்வாய் குறைப்பு

கோவை விமான நிலையம் வந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பிரதமரின் எரிபொருள் சிக்கன அறிவுறுத்தலின்படி தனது கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்ததுடன், மின்சார வாகனங்களாக மாற்றியமைத்தார். திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்க சென்னையிலிருந்து வந்த அவருக்கு பாஜக நிர்வாகிகள் நேற்று வரவேற்பளித்தனர். சர்வதேச எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி