இந்நிலையில், கோவை பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர் கவுடா தலைமையில், தமிழ் எங்கள் உயிர்மொழி, கன்னடம் எங்கள் தாய்மொழி, கன்னட மொழி விரோதி கமலஹாசன் மற்றும் அவரை ஆதரிக்கும் கட்சிகளை வன்மையாக கண்டிக்கிறோம் எனக் குறிப்பிடும் கண்டனப் போஸ்டர்கள், கோவை மற்றும் பொள்ளாச்சி சாலை பகுதிகளில் நேற்று ஒட்டப்பட்டுள்ளன.
மொழியியல் நிபுணர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வரும் நிலையில், இந்த விவாதம் தமிழ்-கன்னட மாநிலங்கள் இடையேயான மொழிசார்ந்த பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.