கோவை: பாஜகவுடன் இணக்கமாக செல்வதே விஜய்க்கு நல்லது - கஸ்தூரி

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக நிர்வாகியும் நடிகையுமான கஸ்தூரி, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது நல்ல விஷயம் என்றாலும் மக்களிடமும் மாற்றம் தேவை என தெரிவித்தார். புதிய ஆட்சிக்கு செயல்பட கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், மதவாதம் என்ற திமுகவின் கருத்தையே விஜய் தொடர்ந்து பேசிவருகிறார் என விமர்சித்த அவர், மத்திய அரசை எதிர்த்து தேவையற்ற பிரச்சினைகளை விஜய் ஏற்படுத்திக்கொள்ள மாட்டார் என்றும், பாஜகவுடன் இணக்கமாக செல்வதே அவருக்கு நல்லது என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி